search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் நோய்"

    குழந்தைகள் கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு பிறகு நோய் வாய்ப்படுவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. #summervacations #childrenfallsick
    புதுடெல்லி:

    குழந்தைகள் பொதுவாக கோடை விடுமுறையின் போது அதிக அளவில் நோய் வாய்ப்படுகின்றனர். ஆண்டு முழுவதும் பள்ளிக்கு சென்று வரும் போது ஏற்படும் உடல்நல குறைபாடை விட கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் போதும், சுற்றுலாவுக்கு வெளியே செல்லும் போதும் ஏற்படுகிறது. இது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் பி.பீரித்தி பேசுகையில்,

    கோடை விடுமுறையின் போது குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர்கள் வீட்டிற்கு உள்ளேயே அடைத்து வைக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு தேவையான சூரிய வெளிச்சம் மற்றும் இயற்கை காற்று போன்றவை கிடைப்பதில்லை. இது விட்டமின் டி குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் விரைவாக சோர்வடைகின்றனர். மற்றும் எளிதாக அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.


    வெளிப்புற தன்மையை குறித்து அறியாமல் இருப்பது மாணவர்களுக்கு படிப்பில் குறைந்த கவனத்தையும், ஒபெசிட்டி, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

    இவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற படிப்பு, டியூசன் போன்றவற்றுக்கு அனுப்பாமல் வெளியில் சென்று விளையாட விட வேண்டும். குழந்தைகள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 9 மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கமில்லாமை குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மனநலத்தில் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கியம், நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும். எடை அதிகரிப்பு, அதிகளவு உணவு உட்கொள்ளுதல் போன்றவை அதிகரிக்கும். இதனால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்.

    மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவை கட்டாயமாக கொடுக்க வேண்டும். அதிக அளவு நீரை பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் மற்றும் பாதாம், பிஸ்தா போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #summervacations #childrenfallsick
    ×